சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர்(Samantha Power) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க் சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமூகமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில், இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம்(18) ஆரம்பமானது.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.