Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் விவகாரம்: சிஐடி அழைக்கும் வரை காத்திருக்கிறேன்; நாமல்

பிள்ளையான் விவகாரம்: சிஐடி அழைக்கும் வரை காத்திருக்கிறேன்; நாமல்

1 week ago
in மட்டு செய்திகள்

பிள்ளையான் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைக்கும் வரை காத்திருக்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையை உருவாக்கும் வகையில் செயற்படுவதாகவும், தங்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு அச்சப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் தங்களை பின்தொடர்வதை விட மக்கள் முன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், மக்கள் ஆணை இருப்பதாக கூறுவதற்கு பதிலாக மாகாணசபை தேர்தலை நடத்துமாறும் தேசிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தினார்.

பிள்ளையான் தொடர்பான விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைத்தால் தானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் முன்வைப்பேன் என தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை தூதரகத்திற்கு அழைத்து எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, புத்தசாசனத்தை அவமதிக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சில தரப்புகள் செயற்படுகின்றன என்றும், அட்டமஸ்தான தேரர் விவகாரத்தை அரசியலாக்குவது முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு