Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

3 months ago
in செய்திகள்

வடக்கு மாகாண தென்னை வலயத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகளை ஒருவர் விற்பனை செய்துள்ளதாக வவுனியா பம்பைமடு பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வடக்கு பகுதியில் தென்னை உற்பத்தி வலயத்தை உருவாக்க அரசாங்கம் கடந்த ஆண்டு முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அத்திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கருக்கு 64 தென்னை கன்றுகள் வீதம் மானியமாக வழங்கப்படுவதுடன், உரம் மற்றும் நீர் வழங்கலுக்கான கொடுப்பனவுகளும் அரச நிதியின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வவுனியா மாவட்ட தென்னை அதிகார சபைக்குட்பட்ட பம்பைமடு கமநல அபிவிருத்தி பிரிவின் செக்கட்டிப்புலவு பகுதியில் ஐந்து ஏக்கர் காணி கொண்டிருந்த வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், மானியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 320 தென்னை கன்றுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அந்தக் கன்றுகளை காணியில் நடவு செய்யாமல், ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் விற்பனை செய்து விட்டு, குறித்த நபர் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மானியத் திட்டம் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி அதிகாரிகளின் மேற்பார்வையில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், பம்பைமடு பகுதிக்குட்பட்ட சிலருக்கு வழங்கப்பட்ட மானியத் தென்னை கன்றுகள் நடவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும், அபிவிருத்தி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பரிந்துரை செய்யாத காரணத்தால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரம் மற்றும் நீர் வழங்கல் கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
மட்டு ஏறாவூரில் குளியலறை தண்ணீர் தொட்டியில் முழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டு ஏறாவூரில் குளியலறை தண்ணீர் தொட்டியில் முழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு