Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது. நிலைமை கையை மீறிச் சென்றதால், பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பாரை விட்டு வெளியேற்றினர்.

பாரை விட்டு வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஓயவில்லை. வீதியில் வைத்து மீண்டும் இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலின் உச்சகட்டமாக, ஒரு தரப்பினர் ஆத்திரத்தில் எதிர்தரப்பினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் யான்சி என்ற பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் என்பது தெரியவந்துள்ளது.

யான்சியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுமிக்கும் இந்த மோதலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுமி தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.

இந்த கொடூரக் கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு