Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை;எதிர்ப்பை வெளியிட உள்ள பொதுமக்கள்!

மட்டு கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை;எதிர்ப்பை வெளியிட உள்ள பொதுமக்கள்!

3 years ago
in மட்டு செய்திகள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது உயிரை பணயம் வைத்து தினம் தினம் இரவு பகல் பாராது கடலுக்குச் சென்று தொழில்செய்து வரும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கடல் அட்டை பிடித்து வரும் கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை பாவித்து கடற்தொழிலாளர்கள் அல்லாத சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் அனுமதி பத்திரம் வழங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடற்தொழிலில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்களமும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் என கூறும் சிலருக்கு குறித்த அனுமதி பத்திரங்கள் வழங்கியுள்ளமை கடலை நம்பி வாழ்கின்ற கடற்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்தொழிலாளர்கள் நாரா நிறுவனத்துடன் பதிவு செய்து 2013 ஆம் ஆண்டு முதல் சட்டரீதியாகவே குறித்த தொழிலினை செய்து வருகின்றனர்.

அனுமதி பத்திரத்தில் பகலில் மட்டும் தொழில் செய்யலாம் என்ற நிபந்தனை அடிப்படையில் இருக்கின்ற காரணத்தினால் பகல் நேரம் மாத்திரமே கடற்தொழிலாளர்கள் செய்துவந்தபோதிலும் டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரத்தை பயன்படுத்தி இரவு நேரத்திலும் அட்டைத் தொழில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடலை நம்பி வாழ்கின்ற கடற்தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த அமைச்சரின் நடவடிக்கை காரணமாக கடற்தொழிலை நம்பி வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழிலை இழந்து காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

இதுவரை காலமும் நேர்த்தியாக இந்த கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி வந்த மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரி மற்றும் மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் தாங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா மீது வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து கொண்டு வருகின்ற நிலையிலும் தற்போது ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கையில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றமை கடற்தொழிலாளர்கள் மத்தியில் கடும் விரக்தியை உண்டு பண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்களமும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் உடன் நடவடிக்கை எடுத்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
Next Post
கச்சதீவையும் விட்டுவைக்காத பெளத்த மயமாக்கல்;ஒப்பந்தத்தை மீறியது இலங்கை!

கச்சதீவையும் விட்டுவைக்காத பெளத்த மயமாக்கல்;ஒப்பந்தத்தை மீறியது இலங்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு