Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அரசுக்கு நஷ்டமே; இலங்கை பெட்ரோலிய தலைவர்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அரசுக்கு நஷ்டமே; இலங்கை பெட்ரோலிய தலைவர்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை திருத்தப்பட்ட போதிலும், ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் அரசாங்கத்திற்கும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் இன்னும் பெரும் நஷ்டம் ஏற்படுவதனால், பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை அதிகபட்சமாக கட்டுப்படுத்த வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அதேபோல், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் செலவு 494 ரூபாயாக இருந்தபோதிலும், அது 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லீற்றரிலிருந்து 60 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

எரிபொருள் மானியத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 57 பில்லியன் ரூபாய் தொகை இந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக தலைவர் கூறுகிறார்.

இதன் காரணமாக, மேலும் இந்த நஷ்டத்தைத் தாங்குவது கடினமாகியுள்ளதுடன், இதற்கு முன்னர் மாதமொன்றிற்கு 100-120 மில்லியன் டொலர்களாக இருந்த எரிபொருள் செலவு, கடந்த மாதத்தில் 522 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளமையானது பொருளாதாரத்திற்கும் டொலர் கையிருப்புக்கும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் செலவு அதிகரிப்பானது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால், பொதுமக்கள் பொறுப்புடன் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தலைவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு இல்லையெனில் டொலர் நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என அவர் எச்சரித்தார்.
எரிபொருள் கட்டுப்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு (QR Code) முறையை முறையாக நடைமுறைப்படுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் தரகுப் பணம் (Commission) அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், QR முறையைப் பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை இந்த வாரம் முதல் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
15 இலட்சம் ரூபா பணம் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; யாழில் சம்பவம்

15 இலட்சம் ரூபா பணம் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; யாழில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு