Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எழுச்சி பாடலை பாடிய குற்றச்சாட்டில் கைதான தமிழ் சொல்லிசை கலைஞருக்கு ஆதரவாக சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

எழுச்சி பாடலை பாடிய குற்றச்சாட்டில் கைதான தமிழ் சொல்லிசை கலைஞருக்கு ஆதரவாக சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை
உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை
சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்
உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு, குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 31 ஆம்திகதி நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களை, குறித்த
இளைஞர் தனது சமூக வலைதளக் கணக்கில் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எடிட் செய்து,
சுயமாகக் குரல் பதிவு செய்து பதிவேற்றிய குற்றத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில்,
நேற்றைய தினம் புதன்கிழமை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சாவகச்சேரி நீதவான்
நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய நிலையில், கலைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில்
விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த கலைஞன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு