Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய உயர்வு எதுவும் ஏற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய பொருளாதார நிலைமையை அரசாங்கம் மிகச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்த தரவுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர், பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதமாகும் போது அந்தச் செலவு 522 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மத்தியில், ஒரு லீற்றர் எரிபொருளின் உண்மையான விலை சுமார் 740 ரூபாவாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அரசாங்கம் தற்போது அதனை 424 ரூபா என்ற எல்லைக்குள் பேணி வருகின்றது.

இதற்காக திறைசேரி சுமார் 20,000 கோடி ரூபாவை செலவிட்டு எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்வது, மக்கள் மீது முழுமையான சுமையை சுமத்தாமல் இருப்பதற்காகவே என்று அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் விலையைத் தவிர ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான கடுமையான தேவை தற்போது இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தெரிவித்தார்.

இருப்பினும், இது தொடர்பாக பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடி, மக்களுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலைகளைக் குறைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பத்மகுமார தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கூட இலங்கையின் பொருளாதாரம் எந்தவொரு சர்வதேச சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய மட்டத்திற்கு வந்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்குரிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் நிறுத்தாமல் முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு