Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

1 day ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விசேட மருத்துவ நிபுணர் ஒருவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கையொப்பத்தை போலி முறையில் பயன்படுத்தி, நோய் விடுப்புப் பெற்றுக்கொள்வதற்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கண்டி பிராந்தியத்திற்குட்பட்ட சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெல்தெனிய இலங்கை போக்குவரத்துச் சபை பணிமனையின் ஊழியர்கள் குழுவொன்று சமர்ப்பித்த மருத்துவச் சான்றிதழ்கள் குறித்து ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த போலி மருத்துவச் சான்றிதழ் மோசடி அம்பலமாகியுள்ளது.

இதற்கமைய, அந்த மருத்துவச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தெல்தெனிய பணிமனை முகாமையாளரால் , கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் வினவப்பட்ட போதே இந்த விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த போலி மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மோசடியானது தெல்தெனிய பணிமனைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல எனவும், கண்டி தெற்கு பணிமனை உட்பட அப்பகுதியின் மேலும் பல பணிமனைகளிலும் இவ்வாறான போலிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கண்டி பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்அங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையினால் உள்வாரி விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து தெல்தெனிய பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
Next Post
கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு வரை நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு வரை நீர் விநியோகம் தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு