தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்ததன்படி, அம்பத்தலை மற்றும் கொலன்னாவை இடையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனால் இன்று (05) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுமெனவும் சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர உள்ளிட்ட பகுதிகளிலும், கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








