மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பான பணிகளை நீண்டகாலத்திற்கு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் மதுர விதானகே பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
தொழில் உரிமைகளுக்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்புகளால் பெரும்பான்மையினரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையை இந்த சட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்றும் மதுர விதானகே குறிப்பிட்டார்.
பிரேரணையை முன்வைத்த மதுர விதானகே, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளில் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்.
பதுளை மாவட்ட சபை உறுப்பினர் சுதர்சன் தெனிபிட்டிய இந்த யோசனையை உறுதிப்படுத்தினார்.