நிலவின் தென்துருவத்தில் -253 டிகிரி செல்சியஸ் குளிரில் உள்ள சந்திரயான் -3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இன்று மீண்டும் செயல்பாட்டை தொடங்க உள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்ததாக லேண்டர், பிரக்யான் ரோவர் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு கால்பதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த பெருமையை இந்தியா பெற காரணமாக இருந்தது சந்திரயான்-3 விண்கலம் தான். அதாவது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் -3 விண்கலத்தை ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தினர்.
இந்த விண்கலம் பூமி சுற்றுவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் நுழைந்தது. அதன்பிறகு உந்து விசை கலனில் இருந்து ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்’ முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உண்மையில் இது இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாகும்.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்தன. நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்யப்ட்டது. அதோடு நிலவின் தென்துருவம் தொடர்பான படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் லேண்டர், ரோவர் கருவிகள் சோலார் பேனல்கள் மூலம் சூரியஒளி மூலம் இயங்குகின்றன. நிலவை பொறுத்தவரை 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இதனால் லேண்டர், விக்ரம் கருவிகளால் பகலில் மட்டுமே இயங்க முடியும். இத்தகைய சூழலில் தான் கடந்த மாதம் 3ம் தேதி நிலவின் தென்துருவத்தில் ரோவர், லேண்டர் ஆகியவற்றின் செயல்பாடுகளை இஸ்ரோ நிறுத்தி வைத்தது. இரண்டு கருவிகளும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தோடு நிலவில் இன்று முதல் சூரிய உதயம் ஏற்பட்டு அடுத்த 14 நாட்கள் பகலாக இருக்கும். இதனால் இன்று முதல் மீண்டும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் செயல்பாட்டை தொடங்கும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்து இருந்தது. அதன்படி நிலவின் தென்துருவத்தில் தூக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை மீண்டும் கண்விழிக்க செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை கண்விழிக்க உள்ளன. அதன்பிறகு வழக்கம்போல் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை கண்விழிக்க செய்வது என்பது மிகவும் சவாலான காரியம் என கூறப்படுகிறது. ஏனென்றால் நிலவின் தென்துருவத்தில் இரவில் அதிகபட்சமாக – 253 டிகிரி செல்ஸியஸ் வரை குளிர் நிலவும். இந்த குளிரால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரின் சோலார் பேனல்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இது சாத்தியமானால் மட்டுமே இஸ்ரோ விஞ்ஞானிகளால் இரு கருவிகளுக்கும் இன்று மறுபிறவி கொடுக்க முடியும். அதோடு சோலார் பேனல்கள் பனியால் மூடாமல் இருந்தால் மட்டுமே அவற்றால் தொடர்ந்து சூரியஒளி மூலம் இயங்க முடியும்.
இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவின் தென்துருவத்தில் உயிர்த்தெழ வைக்க முடியும் என முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.