Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் பிரஸ் டிவி, இந்த இறுதி ஊர்வலத்தை “உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதி ஊர்வலம்” என வர்ணித்துள்ளது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வுகள் தெஹ்ரான், கோம், நஜாஃப், கர்பலா மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ பொதுமக்கள் அஞ்சலி நிகழ்வுகள், தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா மத வளாகத்தில் கமெனியின் சவப்பெட்டி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் மூலம் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிகழ்வில், காசாவைச் சேர்ந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புகளின் பிரதிநிதிகள், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹூதி இயக்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய தெஹ்ரானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த அலி கமெனி, பின்னர் ஈரானின் புனித ஷியா வழிபாட்டுத் தலங்களில் ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இறுதிச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் மக்கள் எண்ணிக்கை குறித்து சுயாதீன ஆதாரங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களனி கங்கையில் இரசாயனப் பொருட்கள் கலப்பு
செய்திகள்

களனி கங்கையில் இரசாயனப் பொருட்கள் கலப்பு

August 25, 2026
யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்
செய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

August 25, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026
மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது
செய்திகள்

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

August 25, 2026
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
செய்திகள்

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

August 25, 2026
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

August 25, 2026
Next Post
கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு