Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆறு மாத கைக் குழந்தையை கடித்துக் குதறிய எலிகள்!

ஆறு மாத கைக் குழந்தையை கடித்துக் குதறிய எலிகள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஆறு மாதங்களேயான கைக்குழந்தையை எலிகள் கடித்து குதறியதில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குழந்தையின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதியில் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார்.

வேறு ஒரு தம்பதியினரும் இவர்களுடன் வசித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார்.

இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்தபோது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான்.

வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தன.

அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரத்தம் செலுத்தப்பட்டது.

அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்ததுடன், காயங்களுக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரியவந்தது.

வீடு முழவதும் குப்பை கூழங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும்
பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் பொலிஸார் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான்.

தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள ஏனைய இரு குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
Next Post
இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி!

இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.