Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கொண்டூருவாவவிலிருந்து பலுகஸ்வெவ வரை 27.7 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதை, சுமார் 60 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுரம் யக்கல்ல வழியாக ஹுருலு வெவ வரை நீரை கொண்டு செல்லும் வட மத்திய கால்வாய் திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்தச் சுரங்கப்பாதை அமைந்துள்ளது.

சுரங்கப்பாதையை அமைப்பதற்காக ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு நவீன சுரங்கத் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மீட்டர் விட்டம் கொண்ட இந்த நீர்ப்பாசன சுரங்கப்பாதையை உள்ளடக்கிய வட மத்திய பிரதான கால்வாய், வட மத்திய மற்றும் வட மாகாணங்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் என்.யு.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் நிறைவு பெறுவதன் மூலம் விவசாயம், நீர் முகாமைத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை

October 14, 2026
சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!
செய்திகள்

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!

October 14, 2026
பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

October 14, 2026
ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

October 14, 2026
சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்
செய்திகள்

சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்

October 14, 2026
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!

October 14, 2026
Next Post
சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு