Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்ட கைதி பிளேட்டால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்ட கைதி பிளேட்டால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

14 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளோற்றால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதான புகையிரத நிலையத்து முன்னால் உள்ள கடை ஒன்றில் 16 ஆயிரம் ரூபா திருடிய மற்றும் கடை ஒன்றை உடைத்து திருடிய மற்றும் திருட்டுச் சம்பவம் உட்பட 3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிசார் நீதிமன்ற பிடிவிறாந்திற்கு கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ம்திகதி ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த குறித்த நபரை வழக்கு விசாரணைக்காக சம்பவ தினமான இன்று திங்கட்கிழமை (20) காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் 3ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து குறித்த கைதி தனது கழுத்தையும் கையையும் பிக்கரக சேவிங் பிளேட்டால் வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பொது படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தனஞ்சே புஸ்பகுமார் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில் திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு மட்டு தலைமையக பொலிசார், தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!
செய்திகள்

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

July 21, 2026
குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

July 21, 2026
Next Post
இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

இரசிகர்கள் எதிர்பார்த்த 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' டிரெய்லர் வெளியானது-LINK

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.