ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற இலங்கைக் குழுவில் அமைச்சர்கள் அல்லாத எம்.பிக்களை அழைத்து சென்றுள்ளமை பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில், அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவில் கலந்து கொண்ட சந்திப்புக்களில் அவரது மகனும் கலந்து கொண்டிருந்ததும் சர்ச்சையாகியிருந்தது.
இது தொடர்பில் நிலைமையை தெளிவுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் இருதரப்பு கூட்டங்களுக்கு தனது மகன் வருகை
தந்த படங்கள் உண்மை என அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.“வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் உயர் மட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் எனது பொறுப்புகளுக்கு மேலதிகமாக,நான் ஐ.நா பொதுச்சபை மற்றும் வொஷிங்டனுக்கான எனது வருகைகளின்போது, மூன்று பொதுவான நிகழ்வுகள், மற்றும் பல இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புகளில் கலந்து கொண்டு வருகிறேன்.
விரிவான வேலைக்கு ஆழ்ந்த ஆராய்ச்சி, எழுத்து மற்றும் நுட்பமான தயாரிப்பு தேவைப்படுகிறது.
அமைச்சர்கள் தங்கள் கடமையை செய்ய அமைச்சு பணம் செலுத்தும், தன்னார்வ பணியாளர்கள் என இருவர்
உள்ளனர். என் மகன் நீண்ட காலமாக எனது ஆராய்ச்சி உதவியாளராகவும், வரைவு எழுத்தாளராகவும் என் வேண்டுகோளின்படி தன்னார்வ அடிப்படையில் செயற்பட்டவர்.
தற்போது அமெரிக்காவில் படிப்பை மேற்கொண்டு வருவதால், ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடர் பருவத்தில் சில நாட்களுக்கு தனது நேரத்தையும் நிபுணர் அறிவையும் வழங்க முன்வந்தார்.அவரது பங்களிப்பு இந்த முக்கியமான விவகாரங்களுக்குத் தயாராக எனக்கு உதவியது என்பதை ஒப்புக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ அல்லது வேறு எந்த சந்தர்ப்பத்திலோ அவர் வெளிவிவகார அமைச்சின்சார்பாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவோ ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பது மிக முக்கியமான விடயம். அவரது பங்களிப்பு முற்றிலும் தன்னார்வமானது.
பொதுமக்கள் தங்கள் பிரதிநிதி களிட மிருந்து பொறுப்புக்கூறலைக் கோருவ தற்கு ஒவ்வொரு உரிமையும் இருப்பதாக நான் உறுதியாக நம்புகி றேன், மேலும் உங்களின் தகவல் அறியும் உரிமைக்கு உண்மைகளை வழங்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்” – என தெரிவித்துள்ளார்.