சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களில் இடம் பெற்றதாகக் கூறப்படும் 107 மோசடிகள் காரணமாக இருபத்து மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தணிக்கைக்கு சமர்ப்பிக் கப்பட்ட அறிக்கைகளின்படி, 2014-2018 காலகட்டத்தில் 15 முறைகேடுகள் மூலம் ஆறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும், 2019 முதல் பெப்ரவரி 2023 வரை 92 முறைகேடுகள் மூலம் 17 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் விவகாரங்களைக் கையாள்வதில் வேண்டு மென்றே தவறுகள் மற்றும் நிதி மோசடிகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த மோசடிகளில் எந்தக் குறைவும் இல்லை என்று அறிக்கை காட்டுகிறது.