சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அது அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் சவூதியின் அணுசக்தித் திட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளதுடன், இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் சவூதி அரேபியா தனது நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி அணு எரிபொருள் தயாரிக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் சவூதி அணு ஆயுதத் திறனை நோக்கி நகரக்கூடும் என்ற அச்சத்தையும் சில தரப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர்.







