முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (23) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது







