கடவுச்சொல் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலைகளில், பயனர்கள் தங்களது அடையாளத்தை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் உறுதிப்படுத்தும் “Selfie Video Verification” வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
AI மூலம் உருவாக்கப்படும் Deepfake மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டங்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய பாதுகாப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வசதியில், பயனர்கள் தங்களது கைப்பேசி கெமரா மூலம் குறுகிய செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்ய வேண்டும். முகத்தின் பல கோணங்களை பதிவு செய்ய தலையை அசைக்குமாறு திரையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
எதிர்காலத்தில் கணக்கை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டால், புதிய செல்ஃபி வீடியோ பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிட்டு அடையாளம் சரிபார்க்கப்படும்.
பயனர்கள் எப்படி பயன்படுத்துவது?
Google Account → Security பகுதிக்குச் செல்லவும்.
Account Recovery / Recovery options என்பதை திறக்கவும்.
Selfie Video Verification வசதி கிடைத்தால் அதை இயக்கவும்.
கெமரா மூலம் முக பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றவும்.
இந்த வீடியோக்கள் பயனரின் அனுமதியுடன் மட்டுமே சேமிக்கப்படும் என்றும், என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பான முறையில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








