Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 7,606 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் செயல்படும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளூராட்சித் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மாவட்ட வாரியாக கருத்தடை செய்யப்படவுள்ள நாய்களின் எண்ணிக்கை வருமாறு:

யாழ்ப்பாண மாநகர சபை – 120 நாய்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி சபைகள் – 5,216 நாய்கள்
கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த பகுதிகள்) – 350 நாய்கள்
முல்லைத்தீவு மாவட்டம் – 750 நாய்கள்
வவுனியா மாவட்டம் (மாநகர சபை உட்பட) – 1,170 நாய்கள்

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கு கருத்தடைச் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை மறுதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், மறுநாள் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ள புதிய ‘விலங்கு நலச் சட்டத்தின்’ ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் நலனைப் பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
Next Post
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.