சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 18 ஆயிரத்துக்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.வருடத்தின் ஆரம்பம் முதல்
இந்த சட்டவிரோத மதுபான போத்தல்கள், அரசுடைமையில் இருந்தன என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
சுங்க வருமான கண்காணிப்பு பிரிவால் ஏல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இது தொடர் பான கலந்துரையாடல்களை மதுவரி திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.
ஏலத்துக்கு விடப்படவுள்ள சட்டவிரோத மதுபான போத்தல்கள், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா
பிட்டியவால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி
அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.