நுவரெலியா வட்டகொட ஓக்ஸ்போர்ட் தோட்டத்தில் அம்மன் கோவில் ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி அம்மன் தாலி காணாமற்போயுள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவந்த பொலிஸார் தங்கள் பாதணிகளை அகற்றாமல் அதனுடன் கோவில் விக்கிரகங்கள் உள்ள பகுதிகளில் நடமாடிய புகைப்படங்கள் தற்போது முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மேற்குறித்த சம்பவம் அமைத்திருப்பது அனைவரினதும் விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளது. விசாரணைக்கு வந்த பொலிஸாரின் மதம் சார்ந்த வணக்கஸ்தலத்தில் இப்படி ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தால் இவ்வாறுதான் சென்றிருப்பார்களா? என்றும் இன்னும் சிலர் நாம் எந்த மதமாயினும் மற்றைய மதத்தினையும் சம்பிரதாயங்களையும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.