Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு!

வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு!

2 hours ago
in செய்திகள்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு விரைவாக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 6,073 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனால் சுமார் 4,707 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொனராகலையில் 1,334 ஏக்கரும், பொலன்னறுவையில் 1,100 ஏக்கரும், அம்பாந்தோட்டையில் 435 ஏக்கரும், அம்பாறையில் 1,004 ஏக்கரும், அனுராதபுரத்தில் 2,200 ஏக்கரும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தகுதியான விவசாயிகளுக்கு நட்டஈடு விரைவாக வழங்கப்படவுள்ளது.

நெல், சோளம் உள்ளிட்ட 6 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய் வரை, அதிகபட்சம் 5 ஏக்கர் பரப்பளவுக்கு அரசாங்கத்தால் நட்டஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பயிர்கள் சேதமடைந்துள்ள விவசாயிகள், விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் கள அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம். மேலும், விவசாய அபிவிருத்தி மையங்களில் உள்ள சேத அறிவிப்புப் பதிவேட்டிலும் பயிர்ச் சேதங்களை பதிவு செய்ய முடியும்.

மேலதிக தகவல்களுக்கு 1918 என்ற விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ மாற்றத்தால் இலங்கையில் பருவமழை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
செய்திகள்

எல் நினோ மாற்றத்தால் இலங்கையில் பருவமழை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

August 19, 2026
துஷ்பிரயோக குற்றச்சாட்டு; அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் விளக்கமறியலில்!
செய்திகள்

துஷ்பிரயோக குற்றச்சாட்டு; அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் விளக்கமறியலில்!

August 19, 2026
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்

August 19, 2026
அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!

August 19, 2026
2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!
செய்திகள்

2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!

August 19, 2026
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!
செய்திகள்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!

August 19, 2026
Next Post
எல் நினோ மாற்றத்தால் இலங்கையில் பருவமழை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

எல் நினோ மாற்றத்தால் இலங்கையில் பருவமழை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு