Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை, உண்மையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, உண்மையில் எந்தவொரு பொருளும் இறக்குமதி செய்யப்படாமல் பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளின் பின்னணியில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின்படி, 89 நிறுவனங்கள் ஊடாக 2023 ஜனவரி முதல் 2025 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் உண்மையான இறக்குமதிகள் இன்றி பெருமளவிலான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் மேலும் பல நபர்களின் தொடர்புகள் குறித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
செய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

October 5, 2026
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

October 5, 2026
ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்
செய்திகள்

ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

October 5, 2026
ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!

October 5, 2026
 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 5, 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
Next Post
விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்

விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு