Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்’; காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தில் பதற்றம்

‘ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்’; காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தில் பதற்றம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில், சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

இந்நிகழ்வைக் கண்டித்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில் OMP வழங்க முன்வரும் இழப்பீடு தங்களுக்கு தேவையில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான மரணச் சான்றிதழ்களையும் ஏற்கப் போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டக்களத்தில் பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் சற்று பதற்ற நிலையும் ஏற்பட்டது.

இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
Next Post
பாடசாலையை விட்டு முச்சக்கரவண்டி ஓட்டும் மாணவ விவாகரம் தொடர்பில் அரசின் அறிவிப்பு

பாடசாலையை விட்டு முச்சக்கரவண்டி ஓட்டும் மாணவ விவாகரம் தொடர்பில் அரசின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு