உலகின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘முரளி-800’ திரைப்படத்தை திரையிட இலங்கை திரைப்பட காட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
‘முரளி-800’ திரைப்படம் வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.‘முரளி-800’ திரைப்படத்துக்காக கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, முரளியின் மீதானமரியாதையின் அடையாளமாக
இலங்கை திரைப்பட சட்டமும் விசேட அனுமதியளித்து மாற் றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நாட்டு திரைப்பட விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி ஒரு வெளிநாட்டுப் படத்தை மொழிபெயர்ப்புடன் காட்டஅனுமதி இல்லை.ஆனால், முரளி நம் நாட்டுக்கு கொண்டு வந்த கௌரவம், மரியாதையை கருத்தில் கொண்டு தமிழ் மொழி படத்தின் சிங்கள மொழிமாற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் மற்றும் கடைசி முறை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.