அனைத்து நன்னடத்தை அதிகாரிகளையும் சமாதான நீதவான்களாக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விவகாரங்களுக்குத் தேவையான சத்தியக் கடதாசிகளைப் பெறும் போது பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி நன்னடத்தை அதிகாரிகளை சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் பிரகாரம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 2347/10-2023 வர்த்தமானி அறி
வித்தலை வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானியின் படி, நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஒவ்வொரு நன்னடத்தை அதிகாரியும், செயலில் நிரந்தர சேவையில் உள்ளவர்களும், அத்தகைய அதிகாரி நியமிக்கப்படும் மாகாணத்தின் அந்தந்த நிர்வாக மாவட்டத்துக்கான சமாதான நீதியரசராக இருக்க வேண்டும்.மேலும், பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள.
ஒவ்வொரு தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும், செயலில் நிரந்தர சேவை யில் இருப்பவர்களும், பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த அந்தந்த நிர்வாக மாவட்டத்துக் கான சமாதான நீதியரசராக இருப்பார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளில் தேவையான பிரமாணப்பத்திரங்களைப் பெறுவதில் உள்ள அசௌகரியங்களைத்தவிர்ப்பதற்காக நன்னடத்தை அதிகாரிகளுக்கு சமாதான நீதவான்களை நியமிக்க வேண்டிய தன் அவசியத்தை கருத்திற்கொண்டு சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவின் தலையீட்டை கருத்தில் கொண்டு நீதி அமைச்சர் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இது குழந்தைகளுக்கான பாராளுமன்ற குழுவில் நீண்ட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தங்கள் கவலைகள் மற்றும் ஆலோசனைகளை மன்றத்தில் முன்வைத்த பங்குதாரர்கள், நீதித்துறைச் செயற்பாட்டின் போது, நன்னடத்தையின்கீழ் இருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உறுதிமொழிப்பத்திரங்களைப் பெறுவதற்கு மூன்றாம் தரப்பினரை குறிப்பி டும்போது சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.