Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு; சுகாதார பரிசோதகர் கைது!

கல்முனை பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு; சுகாதார பரிசோதகர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் கடந்த 18ஆம் திகதி மாணவர்களுக்கான வழமையான சுகாதாரப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாலியல் தொல்லைகளை ஏற்படுத்தியதாக சில மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம், பாடசாலை அதிபர் ஊடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
Next Post
யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு