Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் இளவாலை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குறித்த கைதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதி இளவாலை பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன்போது, குறித்த கைதி தனது மனைவியின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளமை பொலிஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்த பொலிஸார், நேற்று மாலை மனைவியை சந்திப்பதற்காக வந்த சந்தர்ப்பத்தில் கைதியை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கைதியை இன்று (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!
செய்திகள்

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!

October 16, 2026
ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு