Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தி. மு. க என்றாலே பா.ஜ.க நடுங்கும்; ஸ்டாலின் கூறுகிறார்!

அ.தி.மு.கவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது: பா.ஜ.க.நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் திடீர் தடை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், அ.தி.முகவினருக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என பா.ஜ.க நிர்வாகிகளை கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முதன்முறையாக 1998 மக்களவைத் தேர்தலில் உருவானது.
அந்தக் கூட்டணி ஓராண்டு மட்டுமே நீடித்தது. மீண்டும் 2004 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க.
கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது. இதனால், இனிமேல் பா.ஜ.கவுடன்
ஒருபோதும் கூட்டணி கிடையாது என அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின்னர் ஜெயலலிதா மறையும் வரை எந்தத் தேர்தலிலும் பா.ஜ.கவுடன் அ.தி.முக கூட்டணி அமைக்கவில்லை. தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியை ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெரியளவில் வெற்றி பெற்றது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. – பா.ஜ.க.
கூட்டணி உருவானது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. இந்த இரண்டு
தேர்தல்களிலும் தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

தமிழத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. மாநிலத் தலைவராக அண்ணா
மலை நியமிக்கப்பட்டார். அப்போது அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி ஒரே தலைமையாக உருவெடுத்தார். அதன் பின்னர் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே அவ்வப்போது விரிசல் ஏற்பட்டு வந்தது.பல முறை இரு கட்சித் தலைவர்களும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். உச்சக் கட்டமாக ஜெயலலிதா குறித்தும், அண்ணா குறித்தும் அண்ணாமலை முன்வைத்த கருத்துகள் அதிமுகவில் கொந்தளிப்பை உருவாக்கியது. இதனால், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றும்
முயற்சியில் அ.தி.மு.க. தலைவர்கள் ஈடுபட்டனர். அதற்கு பா.ஜ.க. மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக் கப்படுகிறது.

இந்தச் சூழலில் பா.ஜ.கவுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில்
மட்டுமல்ல, தேசிய அளவிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்றும் மக்களவைத் தேர்தலில் மட்டு மல்ல, அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது எனவும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

கூட்டணி முறிவு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். அண்ணாமலையிடம் கேட்டதற்கு, கட்சி மேலிடம்தான் பதில் சொல்லும் எனக் கூறிவிட்டார். அதேநேரத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் பா.ஜ.க வினரும் பட்டாசு வெடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அ.தி.மு.கவினரும், பா.ஜ.கவினரும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.கவினருக்கு எதிராக எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக்
கூடாது என பா.ஜ.கவினருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.கவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
கதாஃபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா? – (கட்டுரை)

கதாஃபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா? - (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.