மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களைத் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தொடர்பான 7 சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதே இந்தத் திருத்தங்களின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, மாலிம்பட பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான பயிலரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கி, அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதும் பயிலரங்கின் நோக்கமாகும்.







