முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின்போது, விமல் வீரவங்ச வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலேயே ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








