நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜெந்திரகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜெந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் வினோ
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்
நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன்
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களே தாங்கள் அனைவரும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் அதற்காக இன்றுவரை போராடும் மக்களினால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்கின்ற அடிப்படையில் அவ் வாக்காள பொதுமக்களாகிய நாம் ஒட்டு மொத்தாக உங்களிடம் உரிமையுடன் விடுக்கும் கோரிக்கை இது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து வெளியிட்டுள்ள கருத்துக்களில் உள்ள சட்டமா அதிபர் தன்னை அழுத்தத்திற்கு உள்ளாக்கியமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் என்பதன் அடிப்படையிலும்
அண்மையில் சனல் 4 நிறுவன வீடியோவில் குறிப்பிட்ட நீதிபதிகளை மாற்றியும் சட்டமா அதிபரை மாற்றியும் தீர்ப்பு மாற்றி வெற்றி கொள்ளப்பட்டது என்ற வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் இதுவரை தமிழர் தரப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என கருதும்
*மிருசுவில் படுகொலையாளி விடுவிப்பு
*செம்மணி படுகொலையாளி விடுவிப்பு
*ஜோசப்பரராஜ சிங்கம் அவர்களின் கொலையாளி விடுவிப்பு போன்ற இப்படி தீர்ப்புகளும் இவ்வாேறே அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையிலும் அவ்வாறு தீர்ப்புகள் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் நடந்த நீதிபதிகள் மாற்றம் சட்டமா அதிபர்களின் மாற்றங்கள் என்பனவற்றின் அடிப்படையிலும் தொடர்ச்சியாக நீதிமன்ற சுயாதினம் இல்லாது செய்யப்படுகின்றது என்பதாலும் இவ்வாறான சுயாதினமாக நீதிமன்றங்கள் செயற்பட முடியாதவிடத்து நீதிமன்றுகள் செயற்பட தேவையான சட்டத்தினை உருவாக்கும் சட்டவாக்க நிறுவனமான பாராளுமன்றமானது இயற்றிய சட்டங்களை எதன் அடிப்படையில் நிறைவேற்ற முடியும் என்ற நிலையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளானா தாங்கள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு இழைக்கப்பட்ட சட்டவிரோத செயற்பாட்டிற்கும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்ட விரோத பௌத்தமயமாக்கல் மற்றும் சட்ட விரோத குடியேற்றங்கள் தொடர்பிலும் எந்த விதமான நடவடிக்கைகளும் இல்லாததையும் முன்நிறுத்தி நாடாளுமன்ற பதிவுப்புத்தகத்தில் வரத்தக்கதாக உரைகளை ஒருமித்து நிகழ்த்தி நாடாளுமன்றில் வைத்தே உங்களுடைய உறுப்புரிமைகளை வறிதாக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாக அரசாங்கத்திற்கான அழுத்தத்தை உள்ளகத்தில் மட்டுமல்லாது தற்போது வழங்கப்படும் கடன் மறுசீர்திருத்திலும் கொண்டுவரலாம் .இதனால் எதுவும் நடக்காது எனவும் இதுக்கெல்லாம் போய் ராஜினாமா செய்வதா என நீங்கள் கருத்து கூற முனைந்தால் வேறு எதுக்கு செய்வீர்கள்? ஆஹ் இது தமிழ் மக்களின் எதிர்ப்பாக உள்ளதாலும் தங்களிடம் வைக்கும் எதிர்பார்ப்பாக உள்ளதாலும் வாக்காள மக்களாகிய எம்மால் தான் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதாலும் அடுத்த தேர்தலில் நாம் வாக்களித்தால் தான் நீங்கள் உறுப்பினர் ஆக முடியும் என்றதை கூறுவதாலும்.இருக்கும் 6-8 மாத காலத்தில் நாடாளுமன்றில் எதுவும் அதிசயம் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பதாலும் நீங்கள் உங்கள் உறுப்புரிமையை உடனடியாக வறிதாக்குங்கள்.
இதே நேரம் ஏனைய தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே விடயத்தில் ஒன்றாக இதே முடிவினை எடுக்கலாம் அவ்வாறு செய்வதால் சிறுபான்மையினரின் ஒருமித்த எதிர்ப்பாகவும் இதனை முன்நிறுத்தலாம். நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூட தன் நண்பன் அமரர் ரவிராஜ் அவர்களின் கொலைக்காக இதில் இணைந்து ராஜினாமா செய்யலாம். இந்த கோரிக்கையை பொதுமக்கள் மிகவும் காத்திரமான முறையில் முன்வைக்கின்றனர்.