Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

34 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள தீர்மானத்துக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக உதவுமே தவிர, உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர உதவாது என அவர் விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்படும் என முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் டீசலின் விற்பனை மற்றும் விநியோகம் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி வரை தளர்த்துவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகையால் உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையால் சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏற்படப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடும் என்ற கவலையும் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டிரம்பின் தீர்மானத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் பேகான், உக்ரைனுக்கு அமெரிக்க மக்களில் 70 சதவீதத்தினர் ஆதரவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யாவின் போர் பொருளாதாரத்துக்கு உதவக்கூடிய வகையில் அமெரிக்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் தார்மீக ரீதியில் தவறானது என அவர் விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய எரிபொருள் மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் முடிவு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுக்கான டீசல் விநியோகத்தை அனுமதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எரிபொருள் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு ஆகியவை தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்
செய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்

October 11, 2026
“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்
செய்திகள்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

October 11, 2026
ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

October 11, 2026
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்
செய்திகள்

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்

October 11, 2026
2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
Next Post
வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு