Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆபிரிக்க நாடான ஜிபூட்டியின் கடற்பரப்பில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 116-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த குறித்த படகு, ஓபோக் நகரின் குஹேரே பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.

இந்த விபத்தில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் நீந்தி கரைசேர்ந்து உயிர் தப்பியுள்ளனர். அவர்களில் 64 பேருக்கு ஓபோக்கில் அமைந்துள்ள மறுவாழ்வு மையத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 109 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஜிபூட்டி கடற்படையினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேடி ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியிலிருந்து பப் அல்-மந்தேப் நீரிணை வழியாக ஏமனுக்குச் செல்லும் ஆபத்தான கடல் வழிப்பாதையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏமனில் வன்முறை மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகின்ற போதிலும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்து சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடும் நோக்கில் பலர் இப்பாதையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், மக்கள் இவ்வாறான ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜிபூட்டிக்கான ஐக்கிய நாடுகள் திட்டப் பணிப்பாளர் அலெக்சாண்டர் கொய்சாக் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்த ஆபத்தான கடல் வழியைப் பயன்படுத்தியவர்களில், 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு
செய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

October 11, 2026
AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 11, 2026
சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

October 11, 2026
குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
செய்திகள்

குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!

October 11, 2026
திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
Next Post
நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு