நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின்போது நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








