Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறைத்தண்டனை வழங்கப்படும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இனிவரும் காலங்களில் பிக்குகள் குறித்த அந்தந்த பீடத்தின் அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலபொடஅத்தே ஞானசார தேரரின் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறைத் தண்டனை பெறும் பௌத்த பிக்குகளை சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்து வரும்போது தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அது தொடர்பான சாசன மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் முப்பீடங்களின் மகா சங்கத்தினரின் பிரதிநிதிகளான தேரர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பைக் கட்டுப்படுத்தும் 1877ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அதன் விதிகளுக்குள் பௌத்த பிக்குகளுக்கான தனியான விசேட விதிகள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்றும், நிலவும் சட்டக் கட்டமைப்புக்குள்ளேயே அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அங்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்த வகையில் நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறி தனி நபர்களுக்காக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தாம் தயாராக இல்லை என்றும், சட்டத்தை தற்போதைய காலத்திற்கு ஏற்ப திருத்தியமைக்கும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன்போது மகா சங்கத்தினர் சார்பில் கருத்துத் தெரிவித்த அனுநாயக்க தேரர்களும் பதிவாளர் தேரர்களும், பௌத்த பிக்கு ஒருவருக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவது அனைத்து மகா சங்கத்தினருக்கும் சமூகத்திற்கும் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விடயமாகும் எனச் சுட்டிக்காட்டினர்.

அதன்படி, பிக்கு ஒருவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர் சார்ந்த பீடங்கள் அல்லது பிரிவுக்கு அது தொடர்பில் அறிவித்து, அந்த பீடம் அல்லது பிரிவின் கருத்துக்களுக்கு அமைவாக அவரை பகிரங்கமாக வெளியில் அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமான விதிகளை உருவாக்குவது பொருத்தமானது என மகா சங்கத்தினர் யோசனை தெரிவித்தனர்.

இதன் மூலம் இந்தச் சலுகையை எவரும் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த உணர்வுபூர்வமான பிரச்சினை குறித்து விரைவாக ஆராய்ந்து, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் விதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காகக் கடந்த 08ஆம் திகதியன்றே 5 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீரவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவில், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த விசேட குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவரான கலாசார விவகார அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர தலைமையில் கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுடன், அதற்கான அவசியமான கொள்கை வழிகாட்டுதல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வழங்கினார். அக்குழு இரண்டு வாரங்களுக்குள் உரிய ஆய்வை மேற்கொண்டு புதிய விதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளின் திருத்தங்களுக்கான யோசனைகளைச் சமர்ப்பிக்கவுள்ளதுடன், அந்தத் திருத்தங்களில் பிக்குகள் தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
Next Post
சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.