Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாளை (13) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாளையிலிருந்து (13) அடுத்த சில நாட்களில் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு