கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களை அச்சுறுத்தி கப்பம் வசூலித்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர் சீனாவில் இயங்கும் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








