Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரித்து வேடமணிந்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரித்து வேடமணிந்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முன்பள்ளி விளையாட்டு விழாவின் வினோத உடைப் போட்டியில், செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரிக்கும் வகையில் வேடமணிந்து பங்கேற்ற சிறுவனின் பெற்றோர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று (13) விசாரணைக்காக அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் அமைந்துள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (12) புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறுவன் ஒருவர், செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்ட சிறுவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் வேடமணிந்து கவனத்தை ஈர்த்திருந்தார்.

தனது உடையில், காரணமின்றிப் புதைக்கப்பட்டதாகவும் தனக்கும் ஏனையோருக்கும் நீதி கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பும் வாசகத்தை அவர் ஏந்தியிருந்தார்.

நிகழ்வின்போது விருந்தினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிறுவன், செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் வகையில் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறுவனின் உருக்கமான பதில்கள் நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், செம்மணி புதைகுழி விவகாரத்தை மையப்படுத்தி சிறுவன் வேடமணிந்து பங்கேற்ற சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்!
செய்திகள்

நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்!

October 13, 2026
கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்
காணொளிகள்

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்

October 13, 2026
ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக பாதயாத்திரை; நான்காவது நாளாக இன்று முன்னெடுப்பு!
செய்திகள்

ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக பாதயாத்திரை; நான்காவது நாளாக இன்று முன்னெடுப்பு!

October 13, 2026
இலங்கையில் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் பதிவு!

October 13, 2026
ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை; நீதிமன்றில் அறிவிப்பு!
செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை; நீதிமன்றில் அறிவிப்பு!

October 13, 2026
துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரியதாகச் சந்தேகம்; சீனப் பிரஜை கைது!
செய்திகள்

துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரியதாகச் சந்தேகம்; சீனப் பிரஜை கைது!

October 13, 2026
Next Post
கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு