பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிற்குப் பயணம் செய்யத் திட்டமிடும் இலங்கை யாத்திரிகர்கள், தங்களது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன் செயல்படுமாறும், உம்ரா குழு பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றைச் சமாளிப்பதற்காக மாற்றுப் பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும் யாத்திரிகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த உம்ரா பயணிகள் பயணத்திற்கு முன்னர் விமானச் சேவைகளின் நிலைமை குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.







