Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் சங்கிலித் திருட்டு- முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது; 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகள் மீட்பு!

அம்பாறையில் சங்கிலித் திருட்டு- முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது; 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகள் மீட்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளில் இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய சம்பவங்கள் தொடர்பில், முக்கிய சந்தேகநபர் உட்பட நான்கு பேரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகிலும், ஓகஸ்ட் 11ஆம் திகதி உகன பகுதியிலும் இரு பெண்களின் தங்கச் சங்கிலிகள் திருடப்பட்டிருந்தன.

விசாரணைகளில், முக்கிய சந்தேகநபர் கொழும்பு, கடுவெல பகுதியில் பேருந்து சாரதியாகப் பணியாற்றி வந்தமை தெரியவந்துள்ளது. இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த திங்கட்கிழமை (12) அம்பாறை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்ய உதவிய அம்பாறை தங்கக் கடை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கல்முனைத் தங்கக் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உருக்கப்பட்ட நிலையில் இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளும் மீட்கப்பட்டதுடன், அக்கடையில் பணியாற்றிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஏழு இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

17ஆம் திகதிக்கு பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்; அனோஜனின் சகோதரர்
செய்திகள்

17ஆம் திகதிக்கு பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்; அனோஜனின் சகோதரர்

October 14, 2026
“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்
செய்திகள்

“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்

October 14, 2026
ஞானசார தேரரின் காவி உடை விவகார விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகல்!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை விவகார விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகல்!

October 14, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் எதிர்வரும் 18 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் எதிர்வரும் 18 வரை இடைநிறுத்தம்!

October 14, 2026
23,344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!
செய்திகள்

23,344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!

October 14, 2026
தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க
செய்திகள்

தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க

October 14, 2026
Next Post
“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்

“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு