இலங்கையிலிருந்து யானைச் சாணத்தால் செய்யப்பட்ட குளிர்சாதனப்பெட்டி காந்தங்களைக் கொண்டு வந்த பயணி ஒருவரை, உயிரியல் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி அவுஸ்திரேலிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த நினைவுப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சிப் புழுக்கள் மற்றும் களை விதைகள் இருக்கக்கூடும் என்பதால், அவை நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அவுஸ்திரேலியா வந்தடைந்ததும் அந்தப் பொருட்களைப் பயணி அறிவித்திருந்த நிலையில், விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவற்றைத் தானாக முன்வந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வாங்கப்படும் நினைவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு முன்பு, அவுஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு இறக்குமதி விதிமுறைகளைச் சரிபார்க்குமாறு அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.








