Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் செலவிட வேண்டும்; தவிசாளர் ராஜமணி பிரசாந்த்

கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் செலவிட வேண்டும்; தவிசாளர் ராஜமணி பிரசாந்த்

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்ட நிதியை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நடைபெற்ற மாதாந்த அமர்வில் உரையாற்றிய அவர், குறித்த காலத்துக்குள் நிதியைப் பயன்படுத்தத் தவறினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்படும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா நான்கு இலட்சம் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளியை முன்னிட்டு கொமர்ஷல் “வாவி” பகுதியில் தற்காலிகக் கடைகளை அமைத்து வாடகைக்கு விடுவதன் மூலம் சபைக்கு மேலதிக வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொட்டகலை மற்றும் லிந்துலை மாவட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் முறையாகக் கவனிக்கப்படுவதில்லை என்றும், ஊழியர்கள் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் உறுப்பினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்கு எழுத்துமூலம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் கூறினார்.

அத்துடன், மலையக மக்களை “கள்ளத்தோணி” எனக் குறிப்பிட்ட தோட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர், பிரதேச சபைக்கு 102 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிய அரசாங்கத்துக்கு நன்றியும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் வடகீழ்ப் பருவமழை இன்று ஆரம்பமானது!; 8 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் வடகீழ்ப் பருவமழை இன்று ஆரம்பமானது!; 8 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை

October 15, 2026
திருகோணமலையில் மதுபோதையில் கடமையில் இருந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கைது
செய்திகள்

திருகோணமலையில் மதுபோதையில் கடமையில் இருந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கைது

October 15, 2026
இலங்கையில் தயாரிக்கப்பட்ட சாணக் காந்தம்; அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!
செய்திகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட சாணக் காந்தம்; அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

October 15, 2026
இலங்கை ஊடாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்கள் கடத்தல்!; ரூ.30 கோடிக்கும் அதிகமான இறக்குமதி மோசடி அம்பலம்
செய்திகள்

இலங்கை ஊடாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்கள் கடத்தல்!; ரூ.30 கோடிக்கும் அதிகமான இறக்குமதி மோசடி அம்பலம்

October 15, 2026
ரயிலில் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு
செய்திகள்

ரயிலில் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

October 15, 2026
“பௌத்தர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்; வடக்கில் தமிழ் இனவாதத்திற்கும் முடிவு கட்டுங்கள்” ;விமல் வீரவன்ச
செய்திகள்

“பௌத்தர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்; வடக்கில் தமிழ் இனவாதத்திற்கும் முடிவு கட்டுங்கள்” ;விமல் வீரவன்ச

October 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு