Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

57 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி அகழ்வின்போது, மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எலும்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.

கடந்த 06ஆம் திகதி முதல் நேற்று (14) வரை, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஒன்பது நாட்களாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டம் நேற்று நிறைவடைந்தது.

அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை மேலதிக பகுப்பாய்வுகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் கிடைத்த பின்னரே, இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை வெளியிட முடியும்.

மேலும், குறித்த பகுதியில் செயற்கையான கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு மேலாகக் குப்பைகள் இடப்பட்டு மறைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் முபாறக் முஅஸ்ஸம் கூறியுள்ளார்.

இந்தப் பகுதி குற்றம் இடம்பெற்ற இடமாக இருக்கக்கூடும் என்பதற்கான பல்வேறு காரணிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அறிக்கைகள் கிடைத்த பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். அறிக்கைகள் பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய பொது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய பொது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

October 15, 2026
பாலமுனை, பூநொச்சிமுனை சுருக்குவலை மீனவர்களிடம் இலஞ்சம்வாங்கும் நீரியல் உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

பாலமுனை, பூநொச்சிமுனை சுருக்குவலை மீனவர்களிடம் இலஞ்சம்வாங்கும் நீரியல் உத்தியோகத்தர்கள்

October 15, 2026
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் செலவிட வேண்டும்; தவிசாளர் ராஜமணி பிரசாந்த்
செய்திகள்

கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் செலவிட வேண்டும்; தவிசாளர் ராஜமணி பிரசாந்த்

October 15, 2026
இலங்கையில் வடகீழ்ப் பருவமழை இன்று ஆரம்பமானது!; 8 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் வடகீழ்ப் பருவமழை இன்று ஆரம்பமானது!; 8 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை

October 15, 2026
திருகோணமலையில் மதுபோதையில் கடமையில் இருந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கைது
செய்திகள்

திருகோணமலையில் மதுபோதையில் கடமையில் இருந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் கைது

October 15, 2026
இலங்கையில் தயாரிக்கப்பட்ட சாணக் காந்தம்; அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!
செய்திகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட சாணக் காந்தம்; அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

October 15, 2026
Next Post
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய பொது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய பொது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு