வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியைத் தடுக்கக் கோரும் தீர்மானம், வலி வடக்கு பிரதேச சபையில் இன்று (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி வடக்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வில், சபை உறுப்பினர் செல்வகுமாரன் விஜயராஜினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு எதிராகப் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியைத் தடுக்கக் கோரும் தீர்மானம் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.







