காவி ஆடையை கேடயமாகப் பயன்படுத்தி சில தவறுகளை நியாயப்படுத்த முயன்ற சம்பவங்களை நாம் கண்டுள்ளதாக விரிவுரையாளர் பூஜ்ய கொட்டியாகல தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய அவர், காவி ஆடையும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத அடையாளங்களைப் பயன்படுத்தித் தவறுகளை மறைப்பதையோ அல்லது நியாயப்படுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், எந்தவொரு நபரும் நாட்டின் சட்டத்திற்கு மேலானவர் அல்லர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.








