Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காவி உடையை மீண்டும் அணிவதில் பிடிவாதம் காட்டும் ஞானசார தேரர்

காவி உடையை மீண்டும் அணிவதில் பிடிவாதம் காட்டும் ஞானசார தேரர்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக இதற்கு முன்னரும் சிறைத்தண்டனை பெற்றிருந்தபோதிலும், சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது காவி உடையைக் கழற்றியதில்லை என கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரைச் சந்திப்பதற்காக மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றபோது அவர் இதனைத் தெரிவித்ததாக சட்டத்தரணி சூலா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தனது காவி உடையைக் கழற்றுவதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியதாகவும், இறுதியில் கழற்றப்பட்ட காவி உடை சிறைச்சாலையின் மேற்கூரையில் இருந்த மின்விசிறி ஒன்றில் தொங்கியதாகவும் ஞானசார தேரர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தனது காவி உடை கழற்றப்படும் நடவடிக்கையை யாரோ ஒருவர் தொலைபேசி ஊடாகப் பார்த்ததாகவும், காவி உடையைக் கழற்றுவதன் மூலம் பௌத்தர்கள் மற்றும் மகா சங்கத்தினர் மீதான பகையைத் தீர்த்துக்கொள்ளச் சிலர் விரும்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், உபசம்பதா பெற்ற பிக்குவான தான் மீண்டும் காவி உடையை அணிய வேண்டுமாயின், அது தனது நிக்காயவின் உரிய சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனது நிக்காயவின் நடைமுறைகளுக்கு அமைய மட்டுமே மீண்டும் காவி உடையை அணிவேன் என்றும், வேறு எவரின் மூலமாகவும் அதனை அணியப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியதாக சட்டத்தரணி சூலா அதிகாரி ஊடாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது
காணொளிகள்

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

October 18, 2026
ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
செய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

October 18, 2026
சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்
செய்திகள்

சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்

October 18, 2026
திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

October 18, 2026
அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில
செய்திகள்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில

October 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

October 17, 2026
Next Post
மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு